ஏப்ரல் ரிலீஸிலிருந்து பின்வாங்கிய 5 முக்கிய படங்கள்.. OTTக்கு செல்ல அதிக வாய்ப்பு

மாஸ்டர் படத்திற்கு பிறகு கர்ணன் மற்றும் சுல்தான் போன்ற படங்கள் தியேட்டர்காரர்கள் நெஞ்சில் பாலை வார்த்த நிலையில் தற்போது அவர்களது தலையில் இடியை இறக்கியது போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது அரசாங்கம்.

கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் மீண்டும் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களின் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற சட்டத்தை பிறப்பித்துள்ளது.

இதனால் கர்ணன் படம் முதல் நாள் 100 சதவீத பார்வையாளர்களுடன் நல்ல வசூலைப் பெற்ற நிலையில் அடுத்தடுத்த நாட்களில் வசூல் அளவு குறைந்துள்ளது. இதுவே கர்ணன் படத்தின் வசூலுக்கு கொஞ்சம் பின்னடைவை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 30-ஆம் தேதி வரை இந்த உத்தரவு கடைபிடிக்கப்படும் என்பதால் இடையில் ரிலீஸ் செய்ய இருந்த முக்கியமான 5 திரைப்படங்கள் தற்போது தங்களுடைய ரிலீஸிலிருந்து பின்வாங்கி உள்ளன.

இது தியேட்டர்காரர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் மற்றும் லாபம், சசிகுமாரின் எம்ஜிஆர் மகன், கங்கனா ரனாவத் நடித்த தலைவி படங்களுக்கு எதிர்பார்ப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.

இதில் டாக்டர் படம் மார்ச் 23 ஆம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர் மே மாதம் ரம்ஜான் விடுமுறையில் ரிலீஸ் செய்ய உள்ளதாக குறிப்பிட்டனர். ஆனால் இப்போது அந்த தேதியில் வருமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். இதில் எந்த படத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கிறீர்கள்? என்பதை கமெண்டில் பதிவு செய்யலாம். பின்வாங்கிய இந்த படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்