ஐபிஎல் டி.20 தொடரின் போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கீரன் பொலார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை மட்டுமே எடுத்தது பெங்களூர் அணி.
165 ரன்களை இலக்காக கொண்டு இறங்கிய மும்பை அணி ,19.1 ஓவரிலேயே இலக்கை அசால்டாக சேஸ் செய்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை வீரர் ஹர்திக் பாண்டியாவும், கிறிஸ் மோரிஸ்சும் வார்த்தை போரில் ஈடுபட்டனர்.

களத்திலேயே இருவரும் முட்டிக் கொண்டதால் அவர்கள் மீது ஐபிஎல் நடத்தை விதியை மீறியமைக்காக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
