வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

மார்ஃபிங் போட்டோ, 3 நாட்கள் தூங்காமல் அழுதேன்.. பிரபல பிக் பாஸ் நடிகை வேதனை

தனுஷின் 3 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேப்ரில்லா. அதன்பின், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிக் காட்டிய கேப்ரில்லா, 6வது சீசனீல் டைட்டில் பரிசை வென்று சாதனை படைத்தார். அதன்பின், விஜய் தொலைக்காட்சியில் 7 சி என்ற சீரியல் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட கேப்ரில்லா நடிப்பிலும் தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதன்பின், கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸின் 4வது சீசனிலும் அவர் பங்கேற்றார். அதில், பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

மார்ஃபிங் போட்டாவால் பாதிக்கப்பட்டது குறித்து பேசிய கேப்ரில்லா!

தற்போது, ஈரமான ரோஜாவே, மருமகள் உள்ளிட்ட சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அவர், சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு நடந்த ஒரு கசப்பான அனுபவத்தைத் தெரிவித்துள்ளார்.

அதில், நான் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, என்னிடம் மொபைல் போன் இல்லை. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன். அப்போது என் போட்டோவை மார்பிங் செய்துவிட்டனர், அந்த போட்டோவில் நான் இல்லை என்றாலும் அது நானா இருக்குமோ என நினைக்கும்படி மார்பிங் செய்து பரப்பிவிட்டனர்.

இதனால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டேன். இந்த சம்பவம் நடந்த பின் 3 நாட்களாக நான் பள்ளிக்குப் போகவில்லை. இரவில் தூங்காமல் அழுதேன். பள்ளியில் எல்லோரும் என்னை அப்படி பார்த்து கஷ்டத்தை ஏற்படுத்தியது. என்னுடன் படித்த சிலர் அதை நம்பினார்கள் என வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் நான் ஒல்லியாக இருந்தபோது ட்ரோல் செய்தவர்கள், இப்போது வெயிட் போட்ட பின் ட்ரோல் செய்கிறார்கள். குறை கூறுபவர்கள் குறையேதான் சொல்வர். நான் எதையும் கண்டுகொள்வதில்லை, கமெண்ட்டுகளை பார்ப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Trending News