Tamil Cinema News | சினிமா செய்திகள்
திரை வாழ்வில் அதிக காதலில் சிக்கிய நடிகை இவர்தானா?
கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன் அதிக காதல் பஞ்சாயத்துகளில் சிக்கியதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஒல்லியான இடுப்பில் நன்றாக நடனம் ஆடவும், நடிக்கவும் தெரியும் என பெயர் எடுத்தவர் நடிகை சிம்ரன். தொடக்கத்தில் இந்தி, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்த சிம்ரன் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். ரொம்ப ரிஸ்க் எடுக்காத அவரின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, அவருக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடம் உருவாகியது. சூர்யா, அஜித், விஜய், கமல் உள்ளிட்டா டாப் ஸ்டார்களுடன் ஜோடி போட்டார். முதல்முறையாக நாயகி முக்கியத்துவம் உள்ள கோவில்பட்டி வீரலட்சுமி படமும், விஜயுடன் ஜோடி சேர்ந்த துள்ளாத மனமும் துள்ளும் படமும் சிம்ரன் திரை வாழ்வில் இன்று மைல்கல்லாக இருக்கிறது. அன்றைய காலத்தில் சிம்ரனுக்கு வழங்கப்பட்ட சம்பளம் பல நாயகிகளுக்கு கிடைக்கவில்லை.
இதை தொடர்ந்து, சிறு வயது நண்பர் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கினார். இத்தம்பதிகளுக்கு ஆதீப் மற்றும் ஆடித் என்ற இரு மகன்கள் உள்ளனர். பல வருட இடைவெளிக்கு பின்னர், மீண்டும் சினிமாவிற்கு திரும்பிய சிம்ரனுக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. என்னத்தான் தமிழ் நாயகிகளுக்கு டாப் ரசிகர்கள் இருந்தாலும், திருமணத்திற்கு பிறகு அவர்களை நாயகிகளாக ஒப்பந்தம் செய்ய தமிழ் தயாரிப்பாளர்கள் பெரிதும் தயக்கம் காட்டத் துவங்கி விடுவர். அதே நிலை தான் சிம்ரனுக்கு, அண்ணி, அக்கா கதாபாத்திரம் மட்டுமே கிடைத்து வருகிறது. தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

Simran
இந்நிலையில், சிம்ரன் டாப் நாயகியாக இருந்த போது அவர் சிக்கிய காதல்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சிம்ரன் முதலில் நடிகர் அப்பாஸை காதலித்து இருக்கிறார். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதை தொடர்ந்து, நடன இயக்குனரும், பிரபுதேவாவின் அண்ணனுமான ராஜு சுந்தரத்தை காதலித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுவும் கடைசியில் ப்ரேக் அப்பில் தான் முடிந்து இருக்கிறது. ஆனால், இந்த காதல் குறித்து சிம்ரன் எதுவும் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், நடிகர் கமல்ஹாசனுடன் சிம்ரன் காதல் என்ற தகவல் தீயாக பரவியது. இதற்கு நடிகை சிம்ரன், கமல்ஹாசனின் சொந்த வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருந்ததால் அவருடன் பேசப்பட்டேன். ஆனால் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
