Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினியை விட்டால் விஜய்தான்.. பணத்தால் விளையாடும் தயாரிப்பாளர்
தீபாவளிக்கு படம் ரிலீஸ் என்பது போக தளபதி படம் வரும் நாள் தான் தீபாவளி என மாறிவிட்டது. வருடா வருடம் தீபாவளிக்கு படம் வெளியிடுவதைத் தொடர்ந்து வருகிறார் தளபதி விஜய். பொங்கலுக்கு 10 நாட்கள் தொடர் விடுமுறை இருந்தும் தளபதி தீபாவளியை மிகவும் ஸ்பெஷலாக கருதுகிறாராம்.
தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படம் 2020 சம்மர் ரிலீசாக வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தளபதி 65 படத்தை பற்றிய செய்திகள் பரவ ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் தளபதி 65 படத்தை மகிழ்திருமேனி, சங்கர், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர்களின் யாரேனும் படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
தற்போது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்ட தகவல் என்னவென்றால் சர்க்கார் படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வரும் பொங்கலன்று இந்த அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தை கண்டிப்பாக தீபாவளி 2020 க்கு வெளியிட உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
