Connect with us
Cinemapettai

Cinemapettai

pandian-stores-family-moorthy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உயிருக்குப் போராடும் மூர்த்தியை பார்க்கவந்த தம்பி.. ஹாஸ்பிடலில் இருந்து விரட்டிய குடும்பம்!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கு செய்த சிகிச்சைக்காக 5 லட்சம் கடன் வாங்கி அதைக் கொடுக்க முடியாத பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதால், கதிர்-முல்லை இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி உள்ளனர். கதிர் முல்லைகாக வாங்கிய ஐந்து லட்சம் ரூபாய் கடனை அடைத்த பிறகே வீட்டிற்குள் வருவேன் என சபதம் எடுத்து சென்றிருக்கிறான்.

இருப்பினும் கதிர் வீட்டை விட்டு வெளியேறுவது தாங்கமுடியாமல் குடும்பமே மனவருத்தத்தில் இருந்தபோது, மூர்த்திக்கு திடீரென்று ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் சேர்த்த மூர்த்திக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதை அறிந்த கதிர், உயிருக்குப் போராடும்  அண்ணனைப் பார்க்க ஹாஸ்பிடலுக்கு ஓடோடி வருகிறான். அண்ணி தனத்திடம் தன்னால்தான் அண்ணனுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டது என அழுது புலம்பி மன்னிப்பு கேட்கிறான். உடனே தனம், ‘நீ மறுபடியும் வீட்டுக்கு வந்து விடுகிறேன் என ஒரு முறை சொன்னால் போதும் மூர்த்தி மாமா சரியாகி விடுவார்’ என கதிரை வீட்டிற்கு வரச் சொல்கிறாள்.

உடனே கதிர் தன்னுடைய முடிவில் இருந்து மாறாமல் வீட்டிற்கு வரமாட்டேன் என சொல்ல, கோபமடைந்த தனம் கதிரை மூர்த்தி பார்க்கவிடாமல் ஹாஸ்பிடலில் இருந்து விரட்டி அடிக்கிறார். உடனே கதிரும் அழுதுகொண்டே ஹாஸ்பிட்டலில் இருந்து கிளம்புகிறான். இதன்பிறகு மூர்த்திக்கு மீனாவின் அப்பா இரண்டு லட்சம் பணம் கட்ட, அறுவை சிகிச்சை மேற்கொண்டு மூர்த்தி குணமடைந்து வீடு திரும்புவார்.

அதன்பிறகும் கதிர் மூர்த்தியை வீட்டிற்கு வந்து பார்க்க நினைத்தாலும் அவனால் அந்த வீட்டிற்குள் வர முடியாது என்பதால் கதிர்-முல்லை இருவரும் மென்மேலும் மனம் கலக்கம் அடைகின்றனர். கூடிய விரைவில் கதிர் வெளியூருக்கு சென்று சம்பாதித்து அந்த 5 லட்சம் பணத்தை அடைத்து, மறுபடியும் தன்னுடைய மனைவிக்கு இரண்டாவது முறையாக குழந்தை பெற்றெடுப்பதற்காக சிகிச்சை மேற்கொள்வான்.

அதுவரை முல்லை அவளுடைய அம்மா வீட்டில் இருப்பாள். கூட்டுக் குடும்பத்தை மையமாக கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியலில் ஏதாவது ஒரு தம்பியுடன் மன சங்கடம் ஏற்பட்டு அதன் பிறகு ஒன்று சேர்வது தான் இந்த சீரியலில் வழக்கமாக இருக்கிறதே என சீரியல் ரசிகர்கள் சலிப்படைந்து உள்ளனர்.

Continue Reading
To Top