fbpx
Connect with us

சூர்யாவுடன் மோதும் விஜய் ரசிகர்கள்

News / செய்திகள்

சூர்யாவுடன் மோதும் விஜய் ரசிகர்கள்

moondru-rasikarkal-stills-photos-pictures-01மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யா நடித்த ’24’ திரைப்படம் வரும் மே மாதம் 6ஆம் தேதி வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதே தேதியில் விஜய் ரசிகர்கள் தயாரித்து நடித்த ‘3 ரசிகர்கள்’ திரைப்படமும் வெளிவரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

விஜய்யின் மூன்று வெறித்தனமான ரசிகர்கள் சென்னைக்கு வந்து விஜய்யை பார்க்க முயற்சி செய்யும் கதையம்சம் கொண்ட படமான ‘3 ரசிகர்கள்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் உண்மையிலேயே விஜய் ரசிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது மே 6ஆம் தேதி ரீலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஷெபி என்ற விஜய் ரசிகர் இயக்கியுள்ள இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top