Connect with us
Cinemapettai

Cinemapettai

mookuthi-amman-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சாமி பெயரில் படம் எடுத்துவிட்டு சரக்கு பார்டியா? குடியும் கூத்துமாக வெளியான போட்டோவால் சர்ச்சையில் மூக்குத்தி அம்மன் படக்குழு

தமிழ் சினிமாவில் சாமி படங்கள் வந்து நீண்ட நாட்களாகிவிட்டது. அந்த வரிசையில் பல வருடங்களுக்கு பிறகு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன்.

ஆர் ஜே பாலாஜி மற்றும் நயன்தாரா நடிப்பில் ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் நயன்தாராவின் அம்மன் நடிப்பு இந்தப் படத்தில் பெரிதாக பேசப்பட்டது. அம்மன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பல நாட்கள் நயன்தாரா விரதம் இருந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தது.

அப்படி அம்மன் படத்தை பார்த்து பக்குவமாக இயக்கிய படக்குழுவினர் சக்சஸ் பார்ட்டி என்ற பெயரில் குடியும் கூத்துமாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் செம கடுப்பாகியுள்ளனர். ஏற்கனவே மூக்குத்தி அம்மன் படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை கேவலப்படுத்துவதாக சர்ச்சைகள் எழுந்தது.

தற்போது சக்சஸ் பார்ட்டி என்ற பெயரில் இவர்கள் அடித்த கூத்து அவர்களுக்கே வேட்டாக அமைந்துள்ளது. இந்த புகைப்படத்தை பற்றிதான் தற்போது சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் அதிகமாக இருக்கின்றன.

mookuthi-amman-success-party

mookuthi-amman-success-party

சக்சஸ் பார்ட்டிக்கு ஒருவேளை கூழ் காய்ச்சி ஊத்தி இருந்தால் தப்பித்து இருப்பார்களோ, என்னவோ.

Continue Reading
To Top