Connect with us
Cinemapettai

Cinemapettai

சத்தியமா.. மூக்குத்தி அம்மன் வேற லெவலில் இருக்கும்.. ஆர்.ஜே.பாலாஜி

nayanthara-balaji

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சத்தியமா.. மூக்குத்தி அம்மன் வேற லெவலில் இருக்கும்.. ஆர்.ஜே.பாலாஜி

மூக்குத்தி அம்மன் படம் நிச்சயமாக வேற லெவலில் இருக்கும் என ஆர்.ஜே.பாலாஜி உறுதி அளித்துள்ளார்.

காமெடி வேடங்களில் நடித்துவந்த ஆர்.ஜே.பாலாஜி, எல்.கே.ஜி என்ற அரசியல் நையாண்டி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஐசரி கணேஷ் தயாரித்திருந்த இந்தப் படத்தில் பிரியா ஆனந்த், நாஞ்சித் சம்பத், ஜே.கே.ரித்திஷ் உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிக்கும் படம் மூக்குத்தி அம்மன். இதில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார் . மவுலி, ஊர்வசி, மேயாத மான் இந்துஜா உட்பட பலர் நடிக்கின்றனர். வேல்ஸ், ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது.

கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. படத்தை என்.ஜே.சரவணனுடன் இணைந்து ஆர்.ஜே.பாலாஜியும் இயக்குகிறார்.

இந்த படத்துக்காக, நயன்தாரா விரதம் இருந்து நடித்துள்ளராம் படப்பிடிப்பின்போது, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அங்குள்ள சில கோயில்களுக்குச் சென்று வந்தார் நயன்தாரா.

நயன்தாராவின் அர்ப்பணிப்பை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது என்று இப்படத்தின் நாயகன் ஆர்.ஜே.பாலாஜி கூறியிருந்தார்.

அம்மன் கேரக்டரில் நடிப்பதற்காக, முழு உழைப்பையும் நயன்தாரா கொடுத்து இருக்கிறார். இது, அவரது சினிமா வாழ்வில், முக்கியமான படமாக இருக்கும். அவர் நடிக்கும் என்றும் பாலாஜி கூறினார்.

இந்நிலையில் எல்.கே.ஜி படம் வெளியாகி ஒரு வருடம் ஆகியுள்ளது, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி இந்தப்படம் வெளியாகி இருந்தது. இதையடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஆர்.ஜே.

ஒரு சின்னப் படத்தை, மறக்க முடியாத படமாக ஆக்கிவிட்டீர்கள். உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு நன்றி. மூக்குத்தி அம்மன், உங்களை டபுள்மடங்காக மகிழ்ச்சிப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top