Tamil Cinema News | சினிமா செய்திகள்
மூக்குத்தி அம்மனாக நயன்தாரா தரிசனம்.. பரபரப்பைக் கிளப்பிய செகண்ட் லுக் போஸ்டர்
நடிகை நயன்தாரா அம்மனாக நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது இதில் நயன்தாரா அம்மன் வேடத்தில் காட்சி அளிக்கிறார்.
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேசனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் இணைந்து மூக்குத்தி அம்மன் என்ற பெயரில் படம் இயக்கி உள்ளார்கள்.
எல்.கே.ஜி படத்திற்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக மீண்டும் நடித்துள்ளார்-நயன்தாரா, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், இந்துஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
கன்னியாகுமரி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் எடிட்டிங் மற்றும் பின்னணி இசை உள்ளிட்ட போஸ்ட புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

mookuthi-amman
வரும் மே மாதம் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை திரைக்கு கொண்டுவர உள்ளார்கள். இதன் முதல் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டிருந்தது படக்குழு, தற்போது இரண்டாம் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் அம்மனாக தோன்றி ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார் நயன்தாரா.
