நவீன்

பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக இருந்தவர். மூடர்கூடம் என்ற தரமான படத்தை கொடுத்தவர். ஐந்து வருடம் கழித்து இவரின் அடுத்த படம் “அலாவுதீனின் அற்புத கேமரா”.

naveen moodar koodam aac

இப்படத்தை எழுதி, தயாரித்து, நடித்து இயக்குவது நவீன் தான். பாடல்களை யுகபாரதி எழுதுகிறார். இசை நட்ராஜ் சங்கரன். ஒளிப்பதிவு பாட்சா. எடிட்டிங் கிருபாகரன் புருசோத்தமன். இப்படத்தின் முழு ஷூட்டிங் முடிந்து, ரிலீசுக்கு தயாராக உள்ளது என்று தன் ட்விட்டரில் அறிவித்தார்.

இந்நிலையில் இவரின் அடுத்த பட அறிவிப்பு முழுவதுமாக இன்று இரவு 8 மணிக்கு வெளியாகும். இப்படத்தினை அம்மா க்ரேயாக்ஷன்ஸ் சிவா தயாரிக்கிறார்.

இப்படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் நடிப்பது உறுதியாகி உள்ளது. மற்ற தகவல்கள் வரும் வரை காத்திருப்போம்.

Naveen