Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெளியானது மூடர் கூடம் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் இணையும் பட டைட்டில் போஸ்டர்.
நவீன்
பசங்க பாண்டியராஜின் அசிஸ்டன்ட். டார்க் காமெடியாக மூடர்கூடம் என்ற வித்யாசமான ஜானர் படத்தை கொடுத்தவர். மிக நீண்ட இடைவெளி கழித்து இவரின் அடுத்த படம் “அலாவுதீனின் அற்புத கேமரா” ஆரம்பம் ஆனது. இது பாண்டஸி திரில்லர் வகையாறா. இவரே ஹீரோ, கயல் ஆனந்தி ஹீரோயின். இப்படம் முழுவதும் முடிந்துவிட்டது. இந்நிலையில் இவரின் அடுத்த பட அறிவிப்பு வந்துள்ளது.

AAC flp
அம்மா க்ரேயாக்ஷன்ஸ் சிவா தயாரிக்கிறார். அதிரடி ஆக்ஷன் படமாக இது ரெடியாக உள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், நாசர், ஜெகபதி பாபு முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

AS
இன்று மாலை இப்படத்தின் தலைப்பை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
Here is my next directorial after#AlaudhininArputhaCamera
and the title is#AgniSiragugal
Thnx @ikamalhaasan sir for launching@vijayantony @arunvijayno1 @shalinipandeyyy @TSivaAmma pic.twitter.com/3gpJYgE8ue— Naveen.M (@NaveenFilmmaker) November 1, 2018
