முதலமைச்சர்களுக்கே இவ்வளவு தான் சம்பளமா.? 5 மாநிலத்தையும் தூக்கி சாப்பிட்ட ஸ்டாலின்

சட்டப்பேரவையில் எந்தக் கட்சி அல்லது எந்த அணி பெரும்பான்மை பெற்றுள்ளதோ அந்த கட்சியின் தலைவரை ஆளுநர் முதலமைச்சராக நியமிப்பார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சருக்கு பணிச்சுமையும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் முதலமைச்சரின் சம்பளம் எவ்வளவாக இருக்கும் என்பதை அறிய பலரும் விரும்புவார்கள். அவ்வாறு 5 மாநில முதலமைச்சர்களின் சம்பளத்தை பார்க்கலாம்.

கேரளா : கேரளாவின் 12-ஆவது முதல்வர் பதவியில் இருப்பவர் பினராயி விஜயன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி பதவி ஏற்றார். 2018 ஆம் ஆண்டு சிறந்த முதலமைச்சருக்கான காந்திதர்ஷன் விருது பினராயி விஜயனுக்கு வழங்கப்பட்டது. இவருடைய மாதச் சம்பளம் 1,85,000 ஆகும்.

புதுச்சேரி : புதுச்சேரியில் என் ரங்கசாமி எட்டாவது முதலமைச்சராக கடந்த 2021 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி பதவி ஏற்றார். இவர் நான்காவது முறையாக புதுச்சேரி முதல்வராக பதவியேற்று சாதனை படைத்துள்ளார். என் ரங்கசாமி முதலமைச்சர் பொறுப்புக்காக மாத சம்பளமாக 1,20,000 வாங்குகிறார்.

கர்நாடகா : கர்நாடகாவின் 23 வது முதலமைச்சராக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி பசவராஜ் சோமப்பா பொம்மை பதவி ஏற்றார். இவர் அரசியல்வாதி மற்றும் பொறியாளர் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார். பசவராஜ் மாத சம்பளம் 2,00,000 ஆகும்.

ஆந்திர பிரதேஷ் : ஆந்திர பிரதேஷ் இன் 17வது முதலமைச்சர் பதவியில் இருப்பவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவர் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் மகன் ஆவார். இவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர். இவருடைய மாதச் சம்பளம் 1,25,000 ஆகும்.

தமிழ்நாடு : தமிழ்நாட்டில் மு க ஸ்டாலின் அவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் எட்டாவது முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றார். முக ஸ்டாலின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் ஆவார். அவருடைய மாதச் சம்பளம் 2,05,000 ஆகும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்