Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெளியானது எஸ்ஜே சூர்யா – பிரியா பவானி ஷங்கர் – குட்டி எலி இணைந்து நடிக்கும் பட தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் !
பொடென்ஷியல் ஸ்டுடியோஸ்
2015 இல் மாயா , 2017 இல் மாநகரம் என இரண்டு அறிமுக இயக்குனர்களை வைத்து ஹிட் அடித்த நிறுவனம். இன்னுருவனம் தனது மூன்றாவது படத்தினை துவங்கியதாக நாம் முன்பே சொல்லி இருந்தோம். நாம் கிசு கிசுத்தது போலவே எஸ் ஜே சூர்யா தான் ஹீரோ. இன்று இப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.
மான்ஸ்டர்
Here we go ! My next ! thanks to @iam_SJSuryah @prabhu_sr @rthanga and my entire team ! #MONSTER it is 🙂 https://t.co/MMeJem1lWN
— Nelson Venkatesan (@nelsonvenkat) October 1, 2018
தங்களின் “மா” செண்டிமெண்ட் இப்படத்திலும் தொடர்ந்துள்ளார். சூர்யா , பிரியா பவனி ஷங்கர் மற்றும் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக அறிவித்துள்ளனர். ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். படத்தின் முழு ஷூட்டிங்கும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றதாம்.
படத்தின் ஒளிப்பதிவை கோகுல் பினோய் கவனிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். சாபு ஜோசப் இப்படத்திற்கும் எடிட்டிங் செய்கிறார். இந்நிலையில் கார்ட்டூன் எலி ஒன்றுடன் இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல ரீச் ஆகியுள்ளது.
எலி மட்டும் க்ராபிக்சா அல்லது முழு படமுமே வா என்ற ஆவலை இந்த மோஷன் போஸ்டர் தூண்டியுள்ளது.
