fbpx
Connect with us

மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்.. திக்குமுக்காடிய போலீஸ் அதிகாரிகள்

vellore-money

Tamil Nadu | தமிழ் நாடு

மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்.. திக்குமுக்காடிய போலீஸ் அதிகாரிகள்

வேலூரில் ஒரு தனியார் சிமெண்ட் ஆலையில் மூட்டை மூட்டையாக பணம் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வந்தது.

தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பல பகுதிகள் எங்கேனும் பணம் இருக்கிறதா என்று போலீசார் அதிரடியாக தேடி வருகின்றனர். திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும் வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்தினர்.

தற்பொழுது வேலூரில் ஒரு தனியார் சிமெண்ட் ஆலையில் மூட்டை மூட்டையாக பணம் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு ஆய்வு செய்ததில் மூட்டை மூட்டையாக பணம் இருபது கண்டு பிடிக்கப்பட்டது.

அனைத்து பண மூட்டையிலும் வார்டு நம்பர் எழுதப்பட்டிருந்தது. மொத்தம் எவ்வளவு பணம் என்று அதிகாரிகள் எண்ணி வருகின்றனர். 15 கோடிகளுக்கு மேல் பணம் இருக்கும் என்று தெரிகிறது.

இவ்வளவு இருப்பதால், மேலும் வார்ட் நம்பர் எழுதப்பட்டிருப்பதால் அரசியல் பிரமுகரின் பணமாக இருக்கும் என போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top