fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மணி ஹெய்ஸ்ட் சீசன் 5 விமர்சனம்

money-heist-review

Reviews | விமர்சனங்கள்

மணி ஹெய்ஸ்ட் சீசன் 5 விமர்சனம்

அலெக்ஸ் பினா அவர்கள் உருவாக்கிய ஸ்பானிஷ் வெப் சீரிஸ். இரண்டு சீசன் உள்ள க்ரைம் சீரிஸ் ஆக திட்டமிடப்பட்டது. அந்தளவுக்கு பெரிய வரவேற்பு பெறவில்லை. ஆனால் நெட் பிலிக்ஸ் இதனை வாங்கி சில பல எடிட்டிங் செய்து 22 அத்தியாயம் ஆக மாற்றி ரிலீஸ் செய்ய, உலகளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின்னர் அதிக பட்ஜெட் என அடுத்தடுத்த சீசன் தொடங்கப்பட்டது.

முதல் இரண்டு சீசனில் பணம் அச்சிடும் ராயல் மிண்ட்டில் நுழைந்து திருடுவதற்கு பதில் புது நோட்டுகளை அச்சிடுவர். அல்வரோ மார்ட்டெ ப்ரோபஸ்ஸர் கதாபாத்திரத்தில் கலக்கி இருப்பார். அவர் தான் மூளையாக செயல்படுவார். அடுத்த பார்ட்களில் பேங்கில் புகுந்து தங்கத்தை உருக்குவது என்பது  திட்டம். ஐந்தாவது சீசனின் முதல் ஐந்து அத்தியாயங்கள் (வால்யூம் 1) சமீபத்தில் வெளியாகி உள்ளது.

கதை: சென்ற சீசன் புரொபசர் இருக்கும் இடத்தை கர்ப்பிணி இன்ஸ்பெக்டர் அலிசியா கண்டறிந்து துப்பாக்கி முனையில் அவரை மடக்கி பிடித்துவிட, மறுபுறம் லிஸ்பன் வெற்றிகரமாகக் கொள்ளைக் கும்பலுடன் பேங்க் ஆப் ஸ்பெயினில் நுழைந்துவிடுவார்.

கர்னல் டொமாயோ புதிதாக திட்டம் வகுக்க, டீம் புரொபசர் நிலை பற்றி யோசிக்க ஆரம்பிக்கின்றனர் கதையை. ஒருபுறம் இன்ஸ்பெக்டர் அலிசியாவை புரொபசர் எப்படி சமாளிக்கிறார் என கதை செல்கிறது. மறுபுறம் போலீஸ் தரப்பை ஒதுக்கிவிட்டு ராணுவத்தை கொண்டு வந்து இந்த கும்பலை மடக்க திட்டம் போடுகிறான் டொமாயோ.

டோக்கியோவின் பிளாஷ் பாக், அத்துரோ செய்யும் அதிரடி எதிர் தாக்குதல், நைரோபியின் இழப்புக்கு பதில் கொடுக்க துடிக்கும் டீம் என பரபரப்புக்கு பஞ்சமில்லை. மற்றொரு டிராக்கில் பெர்லின் தன் மகனுடன் சேர்ந்து செய்யும் திருட்டு காட்சிகளாக வருகிறது. (அடுத்த பார்ட்டில் பெர்லின் மகனுக்கு முக்கிய திருப்புமுனை கதாபாத்திரம் என்பது மட்டும் உறுதி.)

சினிமாபேட்டை அலசல்: பழைய சீசன்களில் இருந்த பரபரப்புகளும், ட்விஸ்ட்களும், திட்டமிடல்களும் கொஞ்சம் குறைவு தான், என்றாலும் சலிப்பு தட்டவில்லை. இந்த தொடரின் ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட் என்று தான் சொல்லவேண்டும்.

டோக்கியோ தான் தன் பார்வையில் பல விஷயங்களை சொல்லுபவர், அவருக்கு இப்படி ஒரு நிலையா என ரசிகர்களை கதிகலங்க வைத்து விட்டனர். இந்த சீசன் அத்துரோ அனைவரது எதிர்ப்பையும் ஒரு சேர சம்பாதிக்கிறார். டோக்கியோ மற்றும் ஸ்டாக்ஹோம் இருவரும் தான் இந்த முறை மிகப்பெரிய பிளஸ்.

சினிமாபேட்டை ரேட்டிங்: 3 / 5

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top