இந்தியாவில் 10 கோடி ரசிகர்களை கையில் வைத்துள்ள ஒரே வெப் சீரிஸ்.. ஒரு சீசன் பார்த்தால் நீங்க கூட அடிமை ஆயிடுவீங்க.!

மணி ஹெய்ஸ்ட் என்ற ஸ்பானிஷ் வெப் சீரிஸ் இன்று உலகம் முழுக்க டிரெண்டிங் ஆக உள்ளது. ஸ்பானிஷ் மொழியில் La casa de papel எனும் பெயரில் வெளிவந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை வாங்கிய நெட்ப்ளிக்ஸ் நிறுவனம், அதை மேம்படுத்தி ‘மணி ஹெய்ஸ்ட்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெப் சீரிஸாக வெளியிட்டுள்ளது.

ரசிகர்களின் அனைத்துவிதமான கற்பனைகளுக்கு ஏற்ப அவ்வப்போது உடைபட்டுக்கொண்டே போவது இந்தக் கதையின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம். சாண்டில்யன் கதைகளில் வருவது போன்று ஒவ்வொரு எபிசோடும் சஸ்பென்சாகவே முடியும். அதைவிட அடுத்த எபிசோடின் தொடக்கம் ‘அட இப்படிக்கூட நடக்குமா?’ எனும் வியப்பை லாஜிக் எதையும் மீறாமலே உண்டாக்கும்!

மணி ஹெய்ஸ்ட் கதை ஒரு வங்கியை கொள்ளை அடிக்கும் 8 கொள்ளையர் களையும், அவர்களை வெளியில் இருந்து வழிநடத்தும் புரொபஸர் ஐயும் மையப்படுத்திய உருவானது.

மணி ஹெய்ஸ்ட் ஐந்து பாகங்களைக் கொண்டது. ஐந்தாவது பாகத்தில் முதல பகுதி சமீபத்தில் வெளியிட்ட போது ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘வெர்வ் லாஜிக்’ என்ற நிறுவனம் வெப் சீரிசை தங்களது ஊழியர்கள் பார்ப்பதற்காக விடுமுறை அறிவித்தது.

மணி ஹெய்ஸ்ட் தொடருக்கு உலகம் முழுக்க 100 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் இருப்பதாகவும், இந்தியாவில் மட்டும் 10 கோடி ரசிகர்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இப்போது மணி ஹெய்ஸ்ட் இறுதி பகுதிக்காக உலகமே காத்திருக்கிறது.

Money Heist
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்