Connect with us
Cinemapettai

Cinemapettai

பிக்பாஸில் கவர்ச்சி காட்டியே சம்பாதிக்கும் சிகரம் தொடு நாயகி.. வாரத்திற்கு இத்தனை லட்சம் சம்பளமா?

monal-gajjar-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸில் கவர்ச்சி காட்டியே சம்பாதிக்கும் சிகரம் தொடு நாயகி.. வாரத்திற்கு இத்தனை லட்சம் சம்பளமா?

தமிழைப் போலவே தற்போது தெலுங்கிலும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தமிழில் ஆரம்பிப்பதற்கு முன்னரே தெலுங்கில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் பிரபல கவர்ச்சி நடிகை முமைத்கான், சிகரம் தொடு, வானவராயன் வல்லவராயன் போன்ற படங்களில் நடித்த மோனல் கஜ்ஜார் போன்ற தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகைகளும் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களிடையே வெறுப்பை சம்பாதித்த அர்ச்சனாவை போன்று தெலுங்கில் மோனல் கஜார் பயன்படுத்தப்பட்டு வருகிறாராம். பலமுறை ரசிகர்களால் வெளியேற்றப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டும் பிக்பாஸ் அவரை காப்பாற்றி வீட்டில் தங்க வைத்து வருகிறார்களாம்.

monal-gajjar-biggboss4

monal-gajjar-biggboss4

விஜய் டிவியை விட மோசமான வேலையை தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி செய்து வருகிறதாம். அதுமட்டுமில்லாமல் மோனல் கஜ்ஜார் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்திலிருந்தே கவர்ச்சியான உடைகளை அணிந்து இளம் ரசிகர்களை கவர்ந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லாம் நம்ம யாஷிகாவை பார்த்து கத்துக்கிட்டாங்க போல. மேலும் மோனல் கஜ்ஜாருக்கு வாரம் 3.5 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். மோனல் கஜார் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது கிட்டத்தட்ட 49 லட்சம் சம்பளம் கொடுக்க உள்ளார்களாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பும் போது மோனல் கஜ்ஜார் காட்டும் கவர்ச்சியில் ஆந்திர மாநிலமே சூடு தாங்காமல் அலறுகிறதாம். தமிழில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் நடிகைகள் மற்ற மொழிகளில் தாராளம் காட்டுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் தமிழ் பிக் பாஸ்4 நிகழ்ச்சியில் எதிர்பார்த்த கவர்ச்சி இல்லை என்பதே ரசிகர்களுக்கு ஒரு சின்ன வருத்தம்.

பாத்து செய்யுங்க பிக் பாஸ்!

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top