Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக் பாஸ் வீட்டில் வேல்முருகனை அசிங்கப்படுத்திய பாலாஜி.. தலையில் அடித்து கொள்ளும் ரசிகர்கள்!
விஜய் டிவியில் கோலாகலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான பொழுதுபோக்கு நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன்4.
இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று, ஒரு கன்டஸ்டன்ட்ஸ் உலகநாயகன் கமலஹாசனால் மக்கள் அளித்த வாக்கின் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்.
அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிரபல கிராமிய பாடகர் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டார். அப்போது நடந்த சிரிப்பூட்டும் தருணம் ரசிகர்களை நெகிழ வைத்தது.
ஏனென்றால் ஆஜித், வேல்முருகன் ஆகிய இருவருள் ஒருவர்தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகின்றனர் என்ற இக்கட்டான சூழ்நிலையில், வேல்முருகன் எலிமினேஷன் செய்யப்பட்டபோது அஜீத் வீட்டில் இருக்கப் போகிறார் என்ற சந்தோசத்தில் பாலா அவரை இறுக்க அணைத்து கட்டிப்பிடித்தபடி தூக்கி சுழற்றினார்.
இந்த சம்பவமானது சக ஹவுஸ் மேட்களை வியப்பில் ஆழ்த்தியது. ஏனென்றால் வேல்முருகன் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டதற்கு, பாலாஜி கொஞ்சம் கூட வருத்தப்படலையே! என்ற மற்றொரு கோணத்தில் சக போட்டியாளர்கள் புரிந்துகொண்டனர்.
இப்படி ஒரு ஹவுஸ் மேட் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டபோது, காப்பாற்றப்பட்ட மற்றொரு ஹவுஸ் வீட்டுக்கு பாலாஜி சப்போர்ட் செய்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
