வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு. வேலைவாய்ப்பு, பிசினஸ், கலை என்று அனைத்து துறைகளுக்கும் இந்த வாக்கியம் பொருந்தும். கேரளாவில் இருந்து வந்த பல ஹீரோயின்களுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது நம் கோலிவுட் மட்டுமே. அசின், நயன்தாரா, நித்யாமேனன், லட்சுமி மேனன், மஞ்சிமா மோகன், கீர்த்தி சுரேஷ், நிவேதா தாமஸ் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இப்பொழுது சில நாட்களாக மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் காத்தும் நம் தமிழ் நாடு பக்கம் வீசுகின்றது.

கோலிவுட்

மலையாள சூப்பர்ஸ்டார்ர்களான மம்மூட்டி, மோகன் லால், சுரேஷ் கோபி போன்ற போன ஜெனரேஷன் ஹீரோக்கள் கூட ஒரு சில தமிழ் படங்கள் நடித்துள்ளனர். எனினும் அவர்களின் முழு கவனம் மாலிவுட்டில் தான் இருந்தது. ஆனால் இன்றைய இளம் கதாநாயகர்கள் நிலைபாடு அப்படி இல்லை என்று தான் தோன்றுகிறது.

துல்கர் சல்மான்

மலையாள சினிமாவில் வான்டேட் ஹீரோ இவர் தான். ஆனால் இவர் மொணன்று தமிழ் படங்கள் நடித்துவிட்டார் இந்த குறுகிய சினிமா காரியரில். ‘வாயை மூடி பேசவும்’, ‘ஓகே கண்மணி’, ‘சோலோ’. இவரது அடுத்த படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற நேரடி தமிழ் படம். இவரின் மற்றோரு படமான மகாநதி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது.

நிவின் பாலி

ப்ரேமம் படத்திற்கு பின் மலையாளம் மட்டும் அல்ல இந்திய திரையுலகமே உற்று நோக்கும் ஒருவர். எந்த சினிமா பின்புலனும் இல்லாமல் வந்த இவர், இன்று இளசுகளின் பாவரிட். மலையாளத்தை முதன்மையாக வைத்து எடுக்கப்பட்டாலும் தமிழில் வெளிவந்த படம் ‘நேரம்’. இந்தப்படம் ஆவரேஜாக ஓடியதற்கு காரணம் நஸ்ரியா நசிம் தான். இப்பொழுது ‘ரிச்சி’ வெளியாகி உள்ளது. படத்திற்கு எதிர்மறையான விமர்சனமே வந்துள்ளது. அடுத்து 24 AM ஸ்டுடியோஸின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

அதிகம் படித்தவை:  யாரையும் முந்தி செல்ல வேண்டாம்! யாரை சொல்கிறார் கமல்?

பகாட் பாசில்

இளம் நடிகர் லிஸ்டில் இவர் இல்லையென்றாலும். இவ்வளவு வருடம் கழித்து இவர் சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். அது மட்டும் அல்லாத விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

டோவினோ தாமஸ்

Tovino Thomas

வளர்ந்து வரும் நடிகரான இவரும் அபியும் அணுவும், மாரி- 2 என்று இரண்டு படங்கள் கை வசம் வைத்துள்ளார்.

கோலிவுட் வர என்ன காரணம்

நம் சூர்யா, விஜய் , மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்றவர்களின் படம் மலையாளத்தில் டப்பிங் செய்து அடையும் வெற்றி இவர்களின் மனதில் அந்த மாறுதலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நம் ஊர் ஆர்யா, பரத், விஷால் போன்றவர்கள் நடித்த நேரடி மலையாள படங்கள் அவர்களுக்கு நற்பெயரை பெற்று தந்துள்ளது.

Bahubali_ICICI_Visa_Card
Bahubali ICICI Card

ராஜமௌலி அவர்களின் பாகுபலி இவர்கள் மன மாற்றத்திற்கு முக்கிய காரணம். தெலுங்கு படமாக ஆரம்பிக்கப்பட்டாலும் இன்று இந்திய மொழி படமாகவே பேசப்படுகிறது. அந்த படம் வாயிலாக அந்த நடிகர்களுக்கு கிடைத்தை பெயர், பணம், புகழ் என்று பல ஆதாயங்களை உற்று கவனித்து உள்ளனர் இவர்கள். எனவே நாம் ஏன் நேரடியாக ஒன்று இரண்டு படங்கள் நடித்து விட்டு, பின்னர் தன் படங்களை எடுக்கும் பொழுதே இரண்டு மொழிகளுக்கும் சேர்த்து ரிலீஸ் செய்தால் கிடைக்கும் மார்க்கெட் வால்யூவை பற்றி யோசிக்கின்றனர்.

அதிகம் படித்தவை:  ஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 03.

ப்ரித்வி ராஜ்

Prithvi Raj Sukumaran

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்த பொழுதே பிற மொழிகளில் கவனம் செலுத்தினார். தமிழில் பத்து படங்கள் நடித்துவிட்டார். ‘கனா கண்டேன்; ‘ராவணன்’, ‘மொழி’, ‘காவியத்தலைவன்’ இவருக்கு பெயர் வாங்கி கொடுத்த படங்கள். எனினும் இவருக்காக ஒரு படத்திற்கு ரசிகர் வருவார்களா என்றால் இன்றும் கேள்விக்குறி தான்.
இதுமட்டுமன்றி ஹிந்தி படங்களிலும் நடித்தார். அங்கும் பெரிதாக சோபிக்கவில்லை. இன்றைய நிலை என்ன வென்று பார்த்தால் மலையாள சினிமாவிலும் தன் இடத்தை பறி கொடுத்திவிட்டு இக்கட்டான நிலைமையில் தான் உள்ளார்.

ஸ்பைடர் படம் வாயிலாக தமிழில் அறிமுகம் ஆன மகேஷ் பாபுவின் நிலையே சங்கடத்தில் தான் உள்ளது.

SPYDER Mahesh Babu

தானே தவறு செய்து பட்டு திருந்தாமல், பிறரை பார்த்து சுதாரித்துக்கொள்வது நல்லது. பிற மொழிகளில் கவனம் காட்டுவது நல்ல விஷயம் தான், ஆனால் சொந்த மொழியை விட்டுவிட்டு வேற்று மொழிக்கு செல்வது சிறந்தது அன்று. நடிகைகளின் சினிமா பீரியட் குறுகியது, எனவே அவர்கள் வாய்ப்பு தேடி செல்லலாம். ஹீரோக்களுக்கு அந்த நிலை தற்பொழுது இல்லை எனவே இருக்கிறதை விட்டுவிட்டு பறப்பதை பிடிக்க ஏன் ஆசை படுகிறார்கள் என்று தான் புரியவில்லை.