Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரசாந்த் படத்தை தூக்கி வீசிட்டு சூப்பர் ஸ்டார் வாய்ப்பை பறித்த மோகன் ராஜா.. என்ன சார் இதெல்லாம்!
தமிழ் சினிமாவின் ரீமேக் இயக்குனர் என அனைவராலும் அழைக்கப்பட்ட மோகன்ராஜா தனி ஒருவன் படத்திற்கு பிறகு வேற லெவலுக்கு சென்றுவிட்டார்.
ஆனால் சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்த வேலைக்காரன் திரைப்படம் பெரிய அளவு வரவேற்பு பெறவில்லை.
அதன்பிறகு பிரசாந்துடன் இணைந்து அந்தாதுன் என்ற ஹிந்தி பட ரீமேக்கை இயக்க போவதாக செய்திகள் வெளியானது.
ஆனால் அந்த படத்தில் இருந்து திடீரென விலகி விட்டாராம் மோகன் ராஜா. அதற்கான சரியான காரணம் தற்போது வரை வெளிவரவில்லை.
பிரசாந்த் ரசிகர்களுக்கு டாப் ஸ்டார் செம்ம கம்பேக் என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் மோகன் ராஜா அந்த படத்தில் இருந்து விலகியது அவர்களுக்கு மிகவும் சோகத்தைத் தந்துள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் லூசிபர் என்ற மலையாள பட ரீமேக்கை இயக்க உள்ளாராம் மோகன் ராஜா.

mohan-raja-cinemapettai
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மரண வெற்றி பெற்ற திரைப்படம் தான் லூசிபர்.
