Connect with us
Cinemapettai

Cinemapettai

பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகம்.. கிடைத்த கேப்பில் கிடா வெட்டிய பிரபல இயக்குனர்

mohan-lal-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகம்.. கிடைத்த கேப்பில் கிடா வெட்டிய பிரபல இயக்குனர்

மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற படம் தான் திரிஷ்யம். கிட்டத்தட்ட 10 கோடிக்கும் எடுக்கப்பட்ட இந்த படம் சுமார் 80 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

திரிஷ்யம் படம் இந்தியாவில் உள்ள அனைத்து சினிமா மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமலஹாசன், கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியாகி ஹிட்டடித்தது. நிவேதா தாமஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் ஜீத்து ஜோசப் இந்த ஊரடங்கு நேரத்தில் திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி விட்டதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இந்த கதை உருவாகி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் மோகன்லால், மீனா எனவே கூட்டணிதான் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். ஜீத்து ஜோசப் கடைசியாக மோகன்லால், திரிஷா நடிப்பில் உருவாகிவந்த ராம் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார்.

முழுக்க முழுக்க லண்டனில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கேப்பில் கிடா வெட்டி விட்டார் நம்ம ஜீத்து ஜோசப். திரிஷ்யம் 2 உருவானால் அதே நேரத்தில் பாபநாசம் 2 படத்தை எடுப்பார்களாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top