புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

வெளிநாட்டில் சம்பளம் இல்லாமல் ஆடு மேய்க்கிறார்.. மோகன்லால் மகனுக்கு இந்த நிலைமையா?

எந்த தொழிலும் கேவலம் இல்லை. இருந்தாலும் கூட, செய்யும் தொழில்களை மக்கள் தராதரம் வைத்து பிரித்து பார்த்து தான் வருகிறார்கள். இந்த நிலைமை நாட்கள் ஆகஆக குறையும் என்று பார்த்தால், கூடி கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தான் தற்போது மோகன்லால் மகன் பிராணவை பார்த்து இவருக்கு இப்படி ஒரு நிலையா என்று உச்சுக்கொட்டி வருகிறார்கள்.

மோகன்லாலுக்கு பிரணவ் என்கிற மகனும், விஷ்மயா என்கிற மகளும் உள்ளனர். மூத்தவரான பிரணவ் தன் அப்பா வழியில் நடிக்க வந்துவிட்டார். ஆனால் தான் ஒரு சூப்பர் ஸ்டாரின் மகன் என்கிற பந்தா கொஞ்சம் கூட அவரிடம் இல்லை.

வெளிநாட்டில் ஆடு மேய்க்கும் மலையாள சூப்பர்ஸ்டார் மகன்

ஒரேயொரு பையை எடுத்துக் கொண்டு பயணம் செய்ய ஆரம்பித்த பிரணவ் ஒரு உலகம் சுற்றும் வாலிபனாக இருந்து வருகிறார். இந்த நிலையில், இவரை பற்றி இவருடைய அம்மா கூறிய விஷயம், ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

“அவர் சாதாரண உடை தான் அணிவார். அவர் நினைத்தால் விலை உயர்ந்த கார்களில் வலம் வரலாம். ஸ்டார் ஹோட்டல்களில் தங்கலாம். ஆனால் இது எதையும் அவர் செய்வது இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படத்தில் நடித்தால் போதும் என்கிற முடிவில் இருக்கிறார் பிரணவ். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் உலகம் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.”

“உடனே எல்லாரும், பணம் இருக்கிறது, ஊர் சுற்றுவார் என்று கூறுவார்கள். ஆனால் என் மகன் தனது சொந்த பணத்தில் தான் ஊர் சுற்றுகிறார். தற்போது அவர் ஸ்பெயினுக்கு சென்றிருக்கிறார். அங்கிருக்கும் பண்ணை ஒன்றில் ஆடு மேய்த்து வருகிறார். அதற்கு சம்பளம் கிடையாது. வேலை செய்வதற்கு சம்பளத்திற்கு பதில் தங்க இடமும், உணவும் கிடைக்கிறது. அவர் ஸ்பெயினில் எந்த இடத்தில் இருக்கிறார் என சரியாக தெரியவில்லை.”

“அவருக்கு நிறைய explore பண்ண வேண்டும் என்று ஆசை.. வந்தபிறகு கதை சொல்லுவார். அவருக்கான பட கதைகளை நான் கேட்டுவிட்டு, அவரிடம் கூறுவேன். அவர் முடிவு செய்வார் ” என்று கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு அவர் மீது ஒரு நன்மதிப்பை வர வைத்துள்ளது.

- Advertisement -

Trending News