சூப்பர் ஸ்டார் நடித்த ‘கபாலி’ ஜூரம் தமிழகத்தை மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் வெளிநாட்டிலும் பரவி வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற கடும்போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘கபாலி’ படத்தின் கேரள மாநில உரிமையை பெற பல விஐபிக்கள் முயற்சி செய்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மேக்ஸிலேப் நிறுவனம் ரூ.8.5 கோடி கொடுத்து பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அதிகம் படித்தவை:  தன்னுடைய கலையுலக வாழ்க்கையில் தனக்கு பிடித்தமானவர்களைப்பற்றி பகிர்ந்து கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

மலையாளம் அல்லாத வேற்றுமொழி படம் ஒன்று இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனை ஆவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. மேலும் கேரளாவில் நடைபெறும் புரமோஷனல் நிகழ்ச்சியில் ரஜினியும் மோகன்லாலும் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  கபாலி இயக்குனரின் அடுத்த ஆசை இதுதான் !

ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி’ உள்பட ஒருசில படங்களில் வில்லனாக நடிக்க மோகன்லாலுக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த வாய்ப்புகளில் நடிக்க மறுத்த மோகன்லால் தற்போது ‘கபாலி’ படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றதன் மூலம் முதல்முறையாக ரஜினியுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.