4வது முறையாக மோகன்லாலுடன் இணைந்த பிளாக்பஸ்டர் இயக்குனர்.. தெறிக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சமீபகாலமாக மோகன்லால்(mohanlal)நடிக்கும் படங்கள் அனைத்துமே மலையாளத்தையும் தாண்டி மற்ற மொழிகளிலும் ஒருவிதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அதற்கெல்லாம் காரணம் திரிஷ்யம் படத்தின் வெற்றிதான்.

2013ஆம் ஆண்டு வெளியான திரிஷ்யம் படம் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது மட்டுமில்லாமல் சீன மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு திரிஷ்யம் 2 என்ற படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர் ஜீத்து ஜோசப். தமிழில் கமல் நடித்த பாபநாசம் படத்தையும் இவர்தான் இயக்கினார். அதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ராம் என்ற படத்தில் ஜீத்து ஜோசப் மற்றும் மோகன்லால் இருவரும் இணைந்தனர்.

அந்த படத்தில் நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில நாட்கள் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சரி, அதுவரை சும்மா இருக்க வேண்டாம் என மீண்டும் மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப் கூட்டணியில் 12th MAN என்ற படம் உருவாகி வருகிறது. இவர்கள் இருவரும் இணையும் நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

12th-man-mohanlal
12th-man-mohanlal

திரிஷ்யம் 2 படத்தில் இடம்பெற்றிருந்த திரைக்கதையில் அவ்வளவு சுவாரஸ்யம் இருந்ததால் தற்போது இந்த படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. அதனைத் தொடர்ந்து த்ரிஷ்யம் 3 படம் எப்போது எனவும் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்