இளையதளபதி விஜய் நடித்த ‘ஜில்லா’ படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய கேரக்டரில் நடித்தது மட்டுமின்றி இந்த படத்தின் கேரள மாநில ரிலீஸ் உரிமையையும் பெற்றார்.

இந்நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் ‘விஜய் 60’ படத்தின் கேரள ரிலீஸ் உரிமையையும் பெற அவர் முயற்சி செய்து வருவதாகவும், இதுகுறித்து மோகன்லாலின் Aashirvad Maxlab நிறுவனம் ‘விஜய் 60’ தயாரிப்பு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  தெறி உண்மையில் 100 கோடி வசூல் இல்லை- தென்னிந்தியாவின் முன்னணி தளம் பளீர்

மோகன்லால் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கபாலி’ படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை பெற்று கேரளாவில் பெருவாரியான திரையரங்குகளில் ரிலீஸ் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.