இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.mohanlal-villain-malayalam-movie

தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து, சூர்யா தற்போது செல்வராகவன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகிகளாக ரகுல் ப்ரீத்தி சிங் மற்றும் சாய் பல்லவி நடித்து வருகிறார்கள். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்திற்கு என்.ஜி.கே என பெயர் வைக்கப்பட்டது. நந்த கோபாலன் குமரன் என்ற பெயரின் ஷார்ட் வார்த்தையை என்.ஜி.கே என படத்திற்கு சூட்டி இருப்பதாக நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கிறது. இது படத்தில் சூர்யாவின் பெயர் என கிசுகிசுக்கப்படுகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த வருட தீபாவளி ரேஸில் விஜயின் 62வுடன் இப்படமும் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

surya
surya

இப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் கே.வி.ஆனந்த் படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். ‘அயன்’, ‘மாற்றான்’ படங்களைத் தொடர்ந்து சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை பிரபல லைகா புரோடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் நாயகி வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகள் மட்டுமல்லாமல் சில புதுமுக நாயகிகளும் அலசல் பட்டியலில் இருப்பதாக தெரிகிறது. மேலும், இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியது. அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும். சில பல காரணங்களால் அந்த வாய்ப்பு தட்டிப்போய் இருக்கிறது.

surya

இந்நிலையில், அமிதாப் பச்சன் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து ட்வீட் தட்டி இருக்கும் கே.வி.ஆனந்த், சூர்யாவு, மோகன்லாலும் அடுத்த படத்தில் இணைய இருக்கிறார்கள். படத்தை லைகா ப்ரோடகஷன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. சூர்யாவிற்கு மோகன்லாலுடன் நடிக்க வேண்டும் என்பது பல நாள் ஆசையாம். அதை நிறைவேற்றி தந்து இருக்கிறார் கே.வி.ஆனந்த். செல்வராகவன் படத்தை முடித்துக் கொண்டு இப்படத்தின் வேலைகளில் சூர்யா இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னரே, தமிழ் சினிமாவின் தளபதி விஜய் படத்தில் மோகன்லால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.