மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் மோகன்லால். இன்றும் கேரளா சினிமாவில் பல இளைஞர்கள் ஹீரோக்களாக வந்தும் மோகன்லாலுடன் போட்டி போட முடியவில்லை.

இந்நிலையில் இவருடைய மகன் ப்ரனவ் மோகன்லால் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் ஹீரோவாக களம் இறங்கவுள்ளார்.

இப்படத்திற்கு ஆதி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது, தமிழில் விஜய், த்ரிஷா நடிப்பில் ஆதி என்ற படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

ஜீத்து ஜோசப் தான் மோகன்லால் நடிப்பில் வெளிவந்து பிரமாண்ட வெற்றியை பெற்ற த்ரிஷயம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.