Tamil Cinema News | சினிமா செய்திகள்
குஷ்பு மகள் போலவே 22 கிலோ உடல் எடையை குறைந்த சூப்பர் ஸ்டாரின் வாரிசு.. ஸ்லிம்மாக வெளியிட்ட புகைப்படம்
கோபுர வாசலிலே என்ற படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் நடிகர் மோகன்லால். ஆனால் மலையாளத்தில் 200க்கு மேற்பட்ட படங்களில் நடித்து மலையாள சினிமா ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.
2009ஆம் ஆண்டு கமல்ஹாசன் மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளியான உன்னைப்போல் ஒருவன் தமிழ் மற்றும் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்று. தமிழ்நாட்டில் கமலஹாசன் ரசிகர்களும் மலையாளத்தில் மோகன்லால் ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடினர்.
இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் 2019ஆம் ஆண்டு வெளியான காப்பான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதே ஆண்டு இவர் நடிப்பில் வெளியான லூசிஃபர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி வைத்து மோகன் ராஜா இயக்க உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
தற்போது மோகன்லால் மகளான மாயா மோகன்லாலின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏனென்றால் முதலில் வெளியிட்ட புகைப்படத்தில் படு குண்டாக இருப்பார், என்ன இவ்வளவு குண்டாக உள்ளார் என மோகன்லாலின் மகளை பலரும் விமர்சித்தனர்.

vismaya mohanlal
அதற்கு பதிலடி கொடுக்கும்படி உடற்பயிற்சியெல்லாம் செய்து தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தினை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தது மட்டுமில்லாமல் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
