Connect with us

Cinemapettai

பிக்பாஸ் மோகன் வைத்தியாவிற்கு இப்படி ஒரு சோகமா.. கேட்டால் நீங்களே அழுது விடுவீர்கள்

mohan-vaidiya

Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் மோகன் வைத்தியாவிற்கு இப்படி ஒரு சோகமா.. கேட்டால் நீங்களே அழுது விடுவீர்கள்

விஜய் டிவியில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மோகன் வைத்தியாவிற்கு வாழ்க்கையில் இப்படி ஒரு சோகம் நடந்துள்ளதா என்ற செய்தி பரவி வருகிறது.

விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் மூன்றாம் சீசன் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட மோகன் வைத்தியா வாழ்க்கையில் நடந்த சோகத்தை பற்றி கூறியுள்ளார். ஒரு நாள் தன் வீட்டிற்கு செல்ல மோகன் வைத்தியா அவரது மனைவியும் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது மோகன் வைத்தியா நடைமேடையில் நடந்து கொண்டிருந்தபோது. அவரது மனைவி கையில் வைத்திருந்த ஹேண்ட் பேக் கீழே விழுந்ததிலிருந்து சில்லறைக்காசுகள் தவறி விழுந்துள்ளது.

அவர் ஒவ்வொரு காசுகளை எடுத்து அவரது ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ரயில் வந்துள்ளது. அதனைப் பார்த்து அங்கிருந்த நபர்கள் சத்தம் போட்டுள்ளனர். மேலும் ரயில் ஒலி எழுப்பி வந்துள்ளது. ஆனால் அவர் அதனை கவனிக்காமல் இருந்துள்ளார். அருகில் வந்த ரயில் முதல் பெட்டி அவர் மீது பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இதனைக் கேட்ட பிக் பாஸ் போட்டியாளர் அனைவரும் கண்ணீர் விட்டனர்.

ஆனால் மோகன் வைத்திய கடைசியாக என் மனைவிக்கு காது கேட்காது என்றும் அது அங்கே இருந்த நபர்களுக்கும் ரயில் ஓட்டுனர்கள் தெரியாது ஆனால் எனக்கு மட்டும்தான் என் மனைவிக்கு காது கேட்காது என்பதும் அவர் மூன்று மாத கர்ப்பிணி என்பது தெரியும் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top