Tamil Cinema News | சினிமா செய்திகள்
பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல சீரியல் நடிகர்.. கெட் அப் பார்த்தும் என்ன ரோல் என குழப்பத்தில் நெட்டிசன்கள்
அமரர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்றூப் புதினமே பொன்னியின் செல்வன். கி.பி.1000 ஆம் ஆண்டு இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இதனை படமாக்கும் முயற்சியில் மணிரத்தினம் உள்ளார்.
அதிகாரபூர்வமாக பெரிதாக அறிவிப்புகள் இல்லை. கடந்த வாரம் தாய்லாந்தில் ஜெயம் ரவி, அசோக் செல்வன், கார்த்தி மற்றும் ஐஸ்வர்யா லக்க்ஷ்மி ஆகியோருடன் படப்பிடிப்பு தொடங்கியது என்கின்றனர். மேலும் விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பகுதிகள் அடுத்த ஆண்டு என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.
Waiting for the flight to Delhi. Invited to attend the National film awards tomorrow as a Jury member for Film writing that is books and articles on Films. pic.twitter.com/IUPXHtqEsD
— Mohan Raman (@actormohanraman) December 22, 2019
இந்நிலையில் பிரபல சீரியல் நடிகர் மோகன் ராமன் பொன்னியன் செல்வனின் படத்தில் இணைந்துள்ளது உறுதியாகி உள்ளது. சமீபத்தில் நடந்த தேசிய விருதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர் சென்றார். அப்பொழுது இவர் ஸ்டேட்டஸ் தட்டினார். இவரது தாடியை பற்றி பலரும் கேட்கவே தான் படத்தில் நடிப்பது பற்றி சொல்லியுள்ளார்.
Sir, which char you are playing??
குடந்தை ஜோதிடர்?— எதார்த்தம்! (@etqyBx3KaqHw7qc) December 23, 2019
ஆனால் இப்பொழுது என்ன ரோலாக இருக்கும் என பலரும் கேட்டு வருகின்றனர்.
I am not saying anything about role, date etc etc. Please wait for official news whenever it comes. Hope you understand.
— Mohan Raman (@actormohanraman) December 24, 2019
