Connect with us
Cinemapettai

Cinemapettai

NGK  பார்த்துவிட்டு தாறுமாறாக புகழ்ந்து தள்ளிய பிரபல சீரியல் நடிகர். அட இந்த கோணத்திலும் இப்படத்தை பார்க்கலாமோ ?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

NGK  பார்த்துவிட்டு தாறுமாறாக புகழ்ந்து தள்ளிய பிரபல சீரியல் நடிகர். அட இந்த கோணத்திலும் இப்படத்தை பார்க்கலாமோ ?

சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் பலத்த எதிர்ப்பார்புக்கு இடையே நேற்று வெளியான படம் நந்த கோபாலன் குமரன்.

NGK படத்திற்கு மாஸ் ஒபெநிங் கிடைத்துள்ளது. எனினும் இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றள்ளது. இரண்டரை மணிநேரம் படம், சிறிதும் போர் அடிக்காமல் தான் செல்கிறது. எனினும் செல்வா மற்றும் சூர்யா கூட்டணி என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு இமாலய உயர் சென்றது தான் இந்த நெகட்டிவ் விமர்சனகளுக்கு காரணம் என்றால் அது மிகையாகாது.

மோகன் ராமன், பிரபல திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகர். தொலைக்காட்சித் தொடர்களில் துணை மற்றும் எதிர்மறை வேடங்களில் சிறப்பாக நடித்துப் பெயர் பெற்றுள்ளார். இவரின் மகள் வித்யூலேகா ராமனும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மோகன் ராமன் NGK பார்த்துவிட்டு தன் ட்விட்டரில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

“இப்பொழுது தான் படத்தை பார்த்தேன். சிறந்த பொழுதுபோக்காக அமைந்தது. இன்றைய அரசியல் சூழலின் கவலைக்கிடமான நிலையை காட்டியது. பிரில்லியண்டாக சூர்யா, யுவன் மற்றும் இரண்டு கதாநாயகிகள். வாழ்த்துக்கள் செல்வராகவனுக்கு, இன்றைக்கு தேவையான மெசேஜை இப்படத்தில் சொன்னதற்கு. மேலும் அதனை போதனை போல சொல்லாமல், நம் மனம் கவரும் படி சொல்லியுள்ளார்.” என்பதே அது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top