தனி ஒருவன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா முதன்முதலாக ஜோடி சேர்ந்து சென்ற வாரம் ரிலீசான வேலைக்காரன் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

mohan raja

இந்நிலையில் படத்தின் இயக்குனர் மோகன் ராஜா பல ஊடங்கங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அதில் ஒரு நிகழ்ச்சியின் பொழுது “தல அஜித் அவர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு உள்ளதா?” என்ற கேள்வியும் வந்தது.

அதற்கு மோகன் ராஜா “அஜித் அவர்கள் தனி ஒருவன் படம் பார்த்துவிட்டு தம்பி ஜெயம் ரவியிடம், ‘இவ்ளோ திறமையை வைத்துக்கொண்டு , இத்தனை நாளா உங்க அண்ணன் ஊரையும் ஏமாத்திட்டு தன்னையும் ஏமாத்திட்டு இருந்திருக்கார்’ என கூறியுள்ளார். இதுவே எனக்கு மிகவும் பெருமையான ஒரு உணர்வை தந்தது. அஜித் சார் போன்ற ஒருவரோடு பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தால், புதுவிதமான கதை மற்றும் களத்தை தேர்வு செய்யும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

அஜித் சார் போன்ற ஒரு நடிகரை யாருக்குத்தான் பிடிக்காது? அவருக்கு படம் பண்ணனும்ன்னு யோசிச்சாலே, ஆயிரம் கதைகள் மைண்ட்ல கொட்டும். ஒரு ரசிகனாக, அவரை நிறையவே ரசித்திருக்கிறேன். சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தை உருவாக்கும்பொழுது கூட, என் மனதில் அஜித் சார் வந்து போனதுண்டு.

சில நாட்களுக்கு முன்பு கூட என்னை அணுகிய ஒரு தயாரிப்பாளர், ‘அஜித் சாருடன் ஒரு படம் பண்ணலாமா?’ என்று கேட்டார். அஜித் சாருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைச்சா, ரொம்ப சந்தோஷமாக செய்வேன். அவரோடு பணிபுரிய வேண்டும் என்கிற ஆசை எனக்கும் உண்டு, ” என்று பதில் அளித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  ஒரு மிஸ்டு கால் மூலம் வாழ்க்கையை இழந்த பெண்... பரிதாபமாய் உயிர் விட்ட சம்பவம்!!