fbpx
Connect with us

கோமாளி தம்பி மற்றும் படக்குழுவை பாராட்டி ஸ்டேட்டஸ் தட்டிய அண்ணன்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கோமாளி தம்பி மற்றும் படக்குழுவை பாராட்டி ஸ்டேட்டஸ் தட்டிய அண்ணன்

ஐசரி கணேஷ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று ரிலீஸ் ஆகி சூப்பர் வரவேற்பை பெற்றுள்ள படம் கோமாளி. ஜெயம் ரவி – யோகி பாபு இருவரும் கலக்கி உள்ள காமெடி கலாட்டா இப்படம். இந்நிலையில் இப்படத்தை பார்த்துவிட்டு ஜெயம் ரவியின் அண்ணன் இயக்குனர் மோகன் ராஜா ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார் ட்விட்டரில் …

படத்தை பார்த்து முடித்த பின்பும் நல்ல எண்ணங்கள் மற்றும் சிரிப்பு நம்மிடம் பல மணிராம் ஓட்டிக்கொண்டே உள்ளது. நீண்ட நாட்கள் கழித்து யோகி பாபு நம்மை சத்தமாக சிரிக்க வைத்துள்ளார். வழக்கம் போல ஆதி பிரதரின் இசை படத்தின் கருத்துக்கு பக்க பலம். இயக்குனர் தயாரிப்பாளர், ஹீரோயின்க்கு வாழ்த்துக்கள்.

ஜெயம் ரவி நீ சாதிச்சு விட்டாய். முழு படமும் சூப்பர் தருணங்கள். நன்றிகள் ரசிகர்களுக்கு , குறிப்பாக 90 ஸ் கிட்ஸ் , இந்த பரிசை என் கோமாளி தம்பிக்கு கொடுத்ததற்கு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top