Connect with us
Cinemapettai

Cinemapettai

rudra-thandavam-making-video

Videos | வீடியோக்கள்

பின்னணி இசையில் இணையத்தை மிரட்டும் ருத்ர தாண்டவம்.. வைரலாகும் அடுத்த வீடியோ

இயக்குனர் மோகன்.ஜி இயக்கத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்கள் காரணமாக அதிக அளவிலான விமர்சனங்களையும் திரெளபதி படம் சந்தித்தது. ஒரே படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் மோகன் பிரபலமானார்.

என்னதான் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்திருந்தாலும், திரெளபதி படம் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தையே பெற்றுத் தந்தது. எனவே இயக்குனர் மோகன் இயக்கும் அடுத்த படத்திற்கும் எதிர்பார்ப்பு உருவானது. அவ்வாறு எதிர்பார்ப்புகளுக்கு இடையில் உருவாகியுள்ள படம்தான் ருத்ர தாண்டவம்.

ஜூபின் இசை அமைத்துள்ளார். ஜி.எம்.பிலிம் நிறுவனம் தயாரித்துள்ள ருத்ர தாண்டவம் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் 7ஜி பிலிம்ஸ் சிவா கைப்பற்றியுள்ளார். சமீபத்தில் ருத்ர தாண்டவம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

மேலும் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டுதான் போகிறது. தற்போது இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. தற்போது இந்த படத்தின் பேக்ரவுண்ட் மியூசிக் மற்றும் மேக்கிங் வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

Continue Reading
To Top