Connect with us

Videos | வீடியோக்கள்

முழு சைக்கோவாக மாறிய செல்வராகவன்.. பல உண்மை சம்பவங்களை புட்டு புட்டு வைக்கும் பகாசூரன் ட்ரெய்லர்

செல்வராகவனின் பகாசூரன் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது.

Bakasuran-Trailer

திரௌபதி, ருத்ரதாண்டவம் என மற்ற இயக்குனர்கள் தயங்கும் படத்தை தைரியமாக எடுக்கக் கூடியவர் இயக்குனர் மோகன் ஜி. தற்போது இயக்குனர் செல்வராகவனை ஹீரோவாக வைத்து பகாசூரன் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் நட்டி நட்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. இதில் செல்வராகவன் ஒரு ரவுடியாகவே தனது வாழ்க்கையை வாழ்கிறார். கிட்டத்தட்ட 52 வருடங்கள் தாண்டியும் பெண் வாடை இல்லாமல் இருக்கும் செல்வராகவனுக்கு இளம் பெண்ணை அடைய வேண்டும் என்கிறார்.

Also Read : புது அவதாரம் எடுத்த செல்வராகவன்.. மொத்த கோடம்பாக்கத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம்

ஆனால் அடுத்தடுத்து இளம் பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அவ்வாறு வீட்டில் தனி அறையில் பெண்கள் என்ன செய்கிறார்கள், அதை கவனிக்க ஏன் பெற்றோர்கள் தவறுகிறார்கள் என்பதை பற்றிய படமாக பகாசூரன் படம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் திருமணத்திற்குப் பிறகு சில பெண்கள் வேறு ஆண்களுடன் தொடர்பு கொள்வதைப் பற்றியும் இந்த படத்தில் மோகன் ஜி பேசியுள்ளார். கண்டிப்பாக பகாசூரன் படம் வெளியாகும் போது பல பிரச்சனைகளை சந்திக்க கூடும் என்பதை இந்த ட்ரெய்லரை வெளிப்படுத்தி உள்ளது.

Also Read : ஒரே படத்தால் 12 வருட கடனில் தவித்த செல்வராகவன்.. 2ம் பாகம் எடுக்காததன் காரணம் இதுதான்

பகாசூரன் படம் இப்போதுள்ள இளைய சமுதாயத்திற்கு ஒரு நல்ல கருத்தை சொல்லும் படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு வசனமும் மிகவும் ஆழமாக உள்ளது. இப்படத்தில் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Also Read : மொத்தமாக சொரிஞ்சுவிட்ட செல்வராகவன், தோல்விக்கு இதான் காரணம்.. தனுஷ் ரசிகர்கள் கூட கொண்டாடாத நானே வருவேன்

Continue Reading
To Top