செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

16 வருடங்களுக்குப் பின் தோனியின் வெற்றி ரகசியத்தை உடைத்த இந்திய அணியின் ஜான்டி ரோட்ஸ்.. நீங்க வேற லெவல் தல!

இந்திய அணியின் ஒரு வெற்றிகரமான கேப்டன் என்றால் அது மகேந்திர சிங் தோனியை கூறலாம். கிட்டத்தட்ட மூன்று விதமான ஐசிஐசிஐ கோப்பைகளையும் பெற்றுத் தந்த ஒரே கேப்டன் தோனி. தோனிக்கு முன்னர் இந்திய அணியை உருவாக்கியவர் தாதா கங்குலியை கூறலாம்.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் பெஸ்ட் பீல்டர் எனக் கூறப்படும் முகமது கைப் தோனியை பற்றி மனம் திறந்துள்ளார். மேலும் அவரின் வெற்றியின் ரகசியத்தையும் போட்டு உடைத்துள்ளார்.

மகேந்திர சிங் தோனி 16 வருடங்களுக்கு முன், 2004ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி இந்திய அணிக்காக அறிமுகமாகி வங்கதேசத்திற்கு எதிராகக் களமிறங்கினார். அப்போட்டியில் ரன்கள் எதுவும் எடுக்காமல் முதல் பந்தில் ரன்-அவுட் ஆகி வெளியேறினார்.

தற்போது முகமது கைஃப் இளம் வயது தோனியை நினைவு கூர்ந்துள்ளார், சில விஷயங்களையும் பகிர்ந்துள்ளார். ஆரம்ப காலத்தில் தோனி கிழக்கு மண்டல அணிக்காக விளையாடினார். கேப்டனாக அல்ல, விக்கெட் கீப்பராக. பின் வரும் நாட்களில் அவர் இந்திய ஏ அணியில் இடம் பெற்று வெளிநாட்டு தொடர்களிலும் ஆடி வந்தார்.

முகமது கைப்பின் நண்பர்கள் சிலர் தோனியின் ஆட்டம் வித்தியாமாக இருப்பதாகவும் அவரின் ஹேர் ஸ்டைல் நன்றாக உள்ளதாகவும் கூறினார்களாம். அதன் பின்பு தான் கைப் தோனியை உற்றுநோக்க ஆரம்பித்தாராம்.

Dhoni-Cinemapettai1.jpg
Dhoni-Cinemapettai1.jpg

தோனி அடித்தது போல் ஒரு சிக்ஸரை அதற்கு முன் பார்த்ததே இல்லை. நான், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், சேவாக் போன்றவர்கள் அப்போது விளையாடிக்கொண்டிருந்தோம். அவர் இந்திய அணிக் கேப்டனாக வந்து அணியை உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்வார் என நினைத்துக் கூடப் பார்த்ததில்லை எனத் தெரிவித்தார்.

அதன் பின் மகேந்திரசிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஆண்டின் துவக்கத்தில் அறிவித்தார்.

Kaif-Cinemapettai1.jpg
Kaif-Cinemapettai1.jpg
- Advertisement -

Trending News