Tamil Cinema News | சினிமா செய்திகள்
அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றார் – இந்தியாவின் சிறந்த பீல்டர்
Published on
இந்திய கிரிக்கெட் அவ்வளவு எளிதில் மறந்து விடக்கூடிய நபர் கிடையாது. யூ – 19 உலகக்கோப்பையை வென்ற கேப்டன். தன் டீம் மேட் யுவராஜுடன் இணைந்து இந்திய அணியில் இடம் பெற்றவர்.
2002ல் நாட்வெஸ்ட் கோப்பையை வெல்வதற்கு இவர் அடித்த 87 ரன்கள்
தான் காரணம். நாட்வெஸ்ட் கோப்பையை வென்று 16 ஆண்டுகளாகி உள்ள நிலையில், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறுவதாக கைப் அறிவித்துள்ளார்.
37 வயதாகும் முகம்மது கைப், இந்திய அணிக்காக 13 டெஸ்ட்கள் மற்றும் 125 ஒருதினப் போட்டிகள் ஆடியுள்ளார். மேலும் ஐபில் இல் ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடியுள்ளார். முதல் தர போட்டிகளில் உதிர்ப்பிரேதேசம், ஆந்திரா மற்றும் சட்டிஸ்கர் அணிக்காக ஆடி ரன்கள் குவித்தவர்.
