விஷால் இப்பொழுது புது புது திட்டத்தை போட்டு வருகிறார் அதில் திருட்டு vcd ஒழிப்பது தமிழ்ப்படங்களை திருட்டுதனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பிரபல வலைத்தளங்களின் ஒன்றான தமிழ்கன் இணையத்தின் அட்மின் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியானது.ஆனால், கைது செய்யபட்டது அந்த வலைப்பக்கத்தின் ஒரு மெம்பர் மட்டுமே. தளத்தை இயக்கம் அட்மின் யார் என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது.

இந்நிலையில், படம் வெளியான மூன்று மணிநேரத்தின் யூ-ட்யூபில் விமர்சனம் செய்யும் ஆன்லைன் விமர்கர்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக விஷால் சில கருத்துக்களை கூறியுள்ளார்.அதன்படி, ஆன்லைனில் விமர்சனம் செய்பவர்களை தடுக்க முடியாது. ஒரு படத்தை விமர்சனம் செய்யும் முழு சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு.

ஆனால், விமர்சனம் செய்பவர்கள் விமர்சனம் செய்யும் படத்தின் போஸ்டரையோ, அந்த படத்தில் நடித்துள்ள நடிகர்,நடிகைகளின் புகைப்படத்தையோ, படம் சம்பந்தமான எந்த ஒரு புகைபடத்தையோ Background-ல் மற்றும் வீடியோவில் பயன்படுத்த கூடாது என்றும். மீறும் விமர்சகர்கள் மீது சட்டப்படி காப்புரிமை நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வாங்கி தரப்படும் எனவும் கூறியுள்ளார்.vishal

இதனை நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் விரைவில் நடைமுறைப்படுத்தும் என கூறுகிறார்கள்.மேலும் பேசிய விஷால், இந்த வாரம் ரிலீஸ் ஆன படத்திற்கு அவர்கள் விமர்சனம் கொடுத்தால் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகவுள்ள படத்தின் விளம்பரத்தை அந்த விமர்சகர்களுக்கு கொடுக்கிறார்கள். தவறை எங்கள் பக்கம் வைத்துகொண்டு விமர்சனம் செய்பவர்களை குறைகூறுவது எப்படி சரியாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.