Connect with us
Cinemapettai

Cinemapettai

42 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்காங்க.. யாருமே கேட்கவில்லையே.. நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை

modi

India | இந்தியா

42 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்காங்க.. யாருமே கேட்கவில்லையே.. நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகையை (370வது பிரிவு ) ரத்து செய்து அந்த மாநிலத்தில் இரண்டு யூனியன் பிரதேசமாக அறிவித்து அதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது வரலாற்று சிறப்பு மிக்க முடிவு.
370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ததன் மூலம் சர்தார் படேல், வாஜ்பாய் உள்ளிட்டோர் கனவு நனவாகியுள்ளது.

காஷ்மீரில் ஊழலும் லஞ்சமும் வளரவே 370 ஆவது சட்டப்பிரிவு உதவியது. மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் சென்றடைவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரி இனி யாரும் பழங்குடியின தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை தடுத்து நிறுத்த முடியாது.

370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு அங்கு போர்மேகம் மூளாது, அமைதி உருவாகும். காஷ்மீரில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மக்களுக்கு இடஒதுக்கீடு இவ்வளவு நாளாக கிடைக்கவில்லை .

காஷ்மீர் ஊழியர்களுக்கு மற்ற மாநிலத்தில் உள்ளதை போல சலுகைகள் இனி கிடைக்கும் .
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயமாக உருவாக்கப்படும். காஷ்மீரில் இதுவரை 42000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் யாரும் கேள்வி கேட்டதில்லை என்றார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top