Connect with us

Cinemapettai

modi-swearing

Politics | அரசியல்

8வது மாசம்.. 8ம் தேதி.. 8 மணி.. என்னா ஒரு டைமிங்ல மோடி பேசபோறாரு. ஏடிஎம்முக்கு ஓடும் மக்கள்

இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். ஆனால் மக்கள் பலர் ஏடிஎம் வாசலில் பீதியின் காரணமாக குவிந்து வருகிறார்கள்.

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் 370வது பிரிவினை நீக்கும் முடிவினை பிரதமர் மோடி தலைமையிலான அரசு அண்மையில் எடுத்தது. இதை நாடாளுமன்றத்தில் சட்டமாக இயற்றியும் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு சலுகைகள் அனைத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரே நாடு ஒரே சட்டம், ஒரே நிர்வாகம் என்ற கொள்கைக்குள் வந்துள்ளது.

மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து அறிவித்துளளது. இந்த முடிவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நாட்டு மக்களிடம் இரவு 8மணிக்கு உரையாற்ற உள்ளார். 8வது மாசம்..8ம் தேதி.. 8 மணி.. என ஒரு டைமிங்கில் பிரதமர் பேச உள்ளது பலருக்கு ஆச்சயர்த்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பிரதமர் பேச உள்ளார் என்ற அறிவிப்பை பீதியாக நினைத்து பலரும் ஏடிஎம்வாசலுக்கு ஓடி பணத்தை மொத்தமாக எடுத்து வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top