fbpx
Connect with us

Cinemapettai

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000: ஒரு நல்ல திட்டத்தை தொடங்கி வைத்த மோடி

India | இந்தியா

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000: ஒரு நல்ல திட்டத்தை தொடங்கி வைத்த மோடி

சில மாதங்களுக்கு முன்பு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தனது அறிக்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் 3000 வழங்கப்படும் என்ற திட்டத்தை ஏற்படுத்தியிருந்தார்கள்.

பிரதமர் மோடியும் நாடு முழுவதும் பிரச்சாரத்திற்கு சென்றபோது விவசாயிகளுக்கு இத்திட்டத்தை ஏற்படுத்தித் தருவதாக உறுதி கூறியுள்ளார். இதனால் இத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முன்வந்துள்ளது. இத்திட்டத்திற்கு பிரதமரின் விவசாய ஓய்வூதிய திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

திட்டத்தில் 18 முதல் 40 வயது வரையுள்ள சிறு குறு விவசாயிகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் மாதந்தோறும் 55 முதல் 200 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். அவர்கள் 60 வயதை கடந்ததும் ஓய்வூதியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற தமிழகத்தை சேர்ந்த 30 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 10.15 லட்சம் விவசாயிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இத்திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு இத்திட்டத்தில் சேர்ந்ததற்கான அடையாள அட்டையை பிரதமர் வழங்க உள்ளார்.

தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாயிகளை இத்திட்டத்தில் சேர்க்க வேளாண்துறை அதிகாரிகளுக்கு முதலமச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்த இத்திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

அதப் பண்ற இதப் பண்றன்னு சொல்றீங்களே தவிர.. ஒன்னும் கைக்கு வந்த பாடில்லையே

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top