India | இந்தியா
தமிழையும் தமிழ் நாட்டையும் புகழ்ந்து தள்ளிய மோடி.. புகழ்ந்து பேச வைத்த ட்விட்டர் பதிவுகள்
சமீபகாலமாக பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழ்மொழியும் தமிழ் நாட்டையும் பற்றி பெருமையாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதற்கு காரணம் தமிழக இளைஞர்களே. என்றைக்கு ஹிந்தி மொழி நாடு முழுவதும் கொண்டுவருவதற்கான முயற்சியில் பி.ஜே.பி இறங்கியதோ அன்றிலிருந்தே நம் தமிழர் சமுதாயம் விழித்துக் கொண்டது என்றே சொல்லலாம்.
ட்விட்டரில் கீழடி முதல் தேனி வரை அனைத்து பிரச்சனைகளையும் ட்விட்டரில் ட்ரெண்ட் பண்ணி உலகறிய செய்தனர்.
இதன் தாக்கத்தினால் சமீபத்தில் வெளிநாடு சென்ற பிரதமர் மோடி, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ் வாசகத்தை பேசி தமிழக மக்களிடையே நற்பெயரை சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதேபோல் இன்று சென்னை வந்துள்ள மோடி, உலகத்தில் மிக பழமையான மொழியை கொண்டுள்ள தமிழகத்தில் தான் நான் இப்போது இருக்கிறேன். தமிழ் மொழியை போற்றுவோம் என பேசியுள்ளார்.
என்ன பேசினாலும் வேலைக்கு ஆகாது என்பதை போல நாம் தமிழர்கள், டுவிட்டரில் #gobackmodi என்பதனை பதிவு செய்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். கீழடி நாகரிகம் தோண்டி எடுக்கப்பட்ட போதே தமிழ் மொழியின் வரலாறு மேலோங்கி விட்டது.

go-back-modi
இனியும் அடுத்த மொழியை பெருமை பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்துகொண்ட மோடி தற்போது தமிழ்மொழியை செல்லும் இடமெல்லாம் போற்றி வருகிறார்.
தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..
