தமிழ்த்திரைப்பட திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் விஷால் தலைமையில் பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ மேனன், எஸ்.ஆர் பிரபு, கதிரேசன், ஞானவேல்ராஜா கொண்ட அணி வெற்றி பெற்று பதவி ஏற்ற பிறகு பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

நேற்று முன்தினம் ’விளையாட்டு ஆரம்பம்’ பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் சினிமா தியேட்டர்களில் கேமரா வைத்து படம் எடுப்பவர்களை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படுமென விஷால் அறிவித்தார்.

அதன் பிறகு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடுவை நடிகர் கமல், விஷால் ஆகியோர் சந்தித்து இணையதளங்களில் பைரசி பரவுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

மேலும் நடிகர் விஷால் அமைச்சர் வெங்கைய்யா நாயுடுவிடம் பிரான்ஸ் நாட்டின் சார்பில் நடிகர் கமலுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமலை பாராட்டும் வகையில் இந்திய அளவில் ஒரு பிரமாண்ட விழா பிரதமர் மோடி தலைமையில் நடத்த வேண்டுமென அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக  பிரதமரிடம் கலந்து ஆலோசித்து விரைவில் நல்ல முடிவு தெரிவிப்பதாக வெங்கைய்யா நாயுடு அவர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக விவசாயிகள் பிரச்சனையில் ஆர்வம் காட்டாத நம்ம பிரதமர் நடிகர் ரஜினி அழைப்பை ஏற்று கமல் விழாவில் கலந்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.?