modi_abdul kalam

முன்னாள் குடியரசுத் தலைவரும் இந்திய இளைஞர்களின் எழுச்சி சின்னமுமாகிய விஞ்ஞானி அப்துல் கலாம் அய்யாவின் இரண்டாமாண்டு நினைவு நாளான இன்று அவரது நினைவிடம் பிரதமர் மோடி அவர்களால் திறக்கப்பட்டது.

ராமேஸ்வரம் அருகே உள்ள பேக்கரும்பில் காலை 11:30 மணியளவில் இந்த நினைவிடத்தை மோடி திறந்துவைத்தார்.

16.5 கோடி செலவில் D.R.D.O என்னும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் உதவியோடு கட்டப்பட்ட இந்நினைவிடத்தில்

கலாமின் 6 அடி உயர வெண்கலச்சிலை
அக்னி ஏவுகணை மாதிரி
எஸ்.எல்.வி ராகேட் மாதிரி
மின்னொளியில் ஒளிரும் கலாமின் ஓவியங்கள்
கலாமின் 95 தத்ரூப ஓவியங்கள்
700 புகைப்படங்கள்

அனைத்தும் உள்ளன. அவர் நினைவு நாளை நினைவுகோரும் விதமாக சென்னை மற்றும் ராமேஸ்வரத்திருக்கு பகல் நேர ரயில் சேவை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று பல பள்ளிகளில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: உலகிற்கே பிடித்த ஒரே உன்னத தலைவன்