சென்னை கே.கே நகரைச் சேர்ந்தவர் கானம்நாயர், இவர் விளம்பர படங்கள் மற்றும் குறும்படங்களில் இயக்குநராக பணியாற்றி வருகிறார். மேலும் புகைப்பட கலைஞராகவும் உள்ளார்.கீழ்பாக்கம் கல்லறை சாலையில் உள்ள அழகுக்கலை நிலையத்திலும் கானம் பணியாற்றி வருகிறார்.

கடந்த 26ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து அழகுக்கலை நிலையத்திற்கும் செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் அவர் அன்று அலுவலத்திற்கும் செல்லவில்லையாம். மேலும் கானத்தின் கைப்பேசியும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து சென்னை கே.கே.நகர் காவல்நிலையத்தில் கானம் நாயர் காணவில்லை என அவரின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  மாறியது சாய் பல்லவி படத்தின் டைட்டில் ! முடிவானது ரிலீஸ் தேதி !

ஆனால் கே.கே நகர் போலீசார் எவ்வித முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யாமல் அலட்சியமாகச் செயல்படுவதாக கானம் நாயர் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் அவரை உடனடியாக மீட்டு தரும்படி கண்ணீர் உடன் தெரிவித்தனர்.