இனி ரீசார்ஜ் செய்யாமலே கால் பேசலாம்.. அட்டகாசமான சலுகை வழங்கிய நிறுவனம்

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வந்து பொருட்களை வாங்குவது, மருத்துவ சிகிச்சை போன்றவை தடையின்றி அனுமதிக்கப்படுகின்றன.

சமூக ஆர்வலர்கள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் என அனைவரும்  தங்களது முயற்சியில் கொரோனாவின் விழிப்புணர்வை வீடியோ பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் பல சலுகைகளை மக்களுக்கு அறிவித்து வருகின்றது. அதில் ஒரு முக்கிய பங்காக முன்னணி நிறுவனமான பிஎஸ்என்எல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை ரீசார்ஜ் செய்ய தேவையில்லை என்று அறிவித்துள்ளது.  இதனுடன் சேர்ந்து ஜீரோ பேலன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு 10 ரூபாய்க்கு டாக் டைம் இலவசமாக வழங்கப்படும்.

இதனால் ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள் என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இதனை மற்ற நிறுவனங்களும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனமும் தனது ப்ரீபெய்ட் வேலிடிட்டி ஏப்ரல் 17-ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் விதமாக பாரதி ஏர்டெல் நிறுவனம் 100 கோடி உதவித்தொகை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment