விஜய்க்கு போட்டியாக களத்தில் குதித்த ம.நீ.ம கமல்.. அதிரடியாக 20 தீர்மானங்கள், இதுல ஹைலைட் என்ன தெரியுமா.?

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிப் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை- தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்று வரும் நிலையில், இக்கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. சினிமாவில் சகலகலா வல்லவராக இருந்தாலும் அரசியலில் கமல் இன்னும் கற்ற வேண்டிய நிறையவுள்ளது என்பதற்கேற்ப அவர் முடிவுகளும், செயல்பாடுகள், தேர்தல் பிரச்சாரங்களும் அமைந்தன.

இனிப் போகப் போக அதை மாற்றிக் கொள்வார் என்று மக்களும் நினைத்தனர். ஆனால் அவர் தன் கட்சித் தலைவராக மட்டும் இருந்துகொண்டு, தன் தொண்டர்களுக்கு ஆணைகளையும், தேர்தலில் நிற்கும் போட்டியாளர்களை தேர்வு செய்வதுடன் மட்டும் இருந்துவிட்டு காங்கிரஸ் மற்றும் திமுக ஆதரவாளராகவே மாறிப்போனார். இது அக்கட்சித் தொண்டர்களுக்குமே ஏமாற்றமாக அமைந்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சியை அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஏளனம் பேசி வந்தன. தமிழ் நாட்டில் குறிப்பாக திராவிட அரசியலுக்கு முன் கமலின் மக்கள் நீதி மய்யம் எடுபடாது என்று சாடியிருந்தனர். எனவே கமல் அரசியல் கட்சி ஆரம்பிக்காமல் பேசாமல், ரஜினி மாதிரி கழுவும் மீனில் நழுவும் மீனால இருந்திருக்கலாம் என்று கருத்துக் கூறிவந்தனர்.

இருப்பினும் 6 ஆண்டுகளைத் தாக்குப் பிடித்து வருகிறது. ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்டு தோற்ற கமல் தொடர் சினிமாவைப் போன்று தொடர் முயற்சியை அரசியலில் காட்டி வருகின்றார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தேர்தலில் தோல்வியடைந்த பின் நைசாக அக்கட்சியில் இருந்து நழுவிய நிலையில் சினேகன், ஸ்ரீபிரியா, கோவை சரளா உள்ளிட்டோர் இன்னும் அக்கட்சியில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்று வருகின்றது.இக்கூட்டத்திற்கு அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன், மவுரியா, ஸ்ரீபிரியா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வருகை பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்டத்தில் மொத்தம் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.மேலும், இக்கூட்டத்தில் ஹைலைட்டாக அக்கட்சியின் தலைவராக கமல்ஹாசன் மீண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விஜய் மாநாடு தேதி உறுதியானதும் கமலஹாசன் கட்சி ரீதியாக விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறார் இது தேர்தல் போட்டியாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News