Politics | அரசியல்
வாக்காளர் தினத்தில் அரசியல் புரட்சி செய்யும் கமல்.. நெத்தியடி பதில்கள்..
மக்கள் நீதி மையத்தின் தலைவர் கேள்வி பதில்கள்..!
உமன் கிறிஸ்டின் காலேஜில் நடைபெற்ற வாக்காளர்கள் தின விழாவில் கலந்துகொண்ட கமலஹாசனின் உரையாடல்களை பார்க்கலாம்,
வாக்குச்சாவடிக்கு சென்ற பின்னர் சின்னங்களை பார்த்து வாக்களிக்காதீர்கள். எது உங்களுக்கான அரசியல் கட்சி, மக்கள் நலனிற்காக பாடுபடும் கட்சி என்பதை தேர்ந்தெடுங்கள். மக்கள் நீதி மய்யம் அதில் ஒரு கட்சியாக இருக்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

MNM-Kamal
நான் உங்களை மட்டும் அரசியலுக்கு அழைக்கவில்லை. நானும் உங்களுடன் இருக்கின்றேன்.
எனது வாக்குரிமை எனக்கு மறுக்கப்பட்டது. உங்கள் வாக்கை யாரும் திருடுவிடவும் விட்டுவிடாதீர்கள்.
அரசியலில் ஏன் குதித்தீர்கள் என்று என்னிடம் கேட்கிறார்கள், அவர்களுக்கு எனது பதில், நான் மேலிருந்து கீழே குதிக்கவில்லை, கீழிருந்து மேல் குதிக்கிறேன், அதாவது நான் எழுகிறேன் என்பது தான் உண்மை.
வாக்களிப்பது என்பது உங்கள் முதலீடு. எனவே மிக கவனமாக வாக்களியுங்கள்.
உண்மை தவிர்க்கமுடியாததாக இருந்தால். அது தடுக்கப்பட முடியாததாகவும் இருக்கும்.

MNM-Kamal
ஆசிஃபாவிற்காக கொதிக்காத குருதி எனது ஒரு ஓவியத்திற்காக கொதித்தது என்கின்றனரே?
மாணவர்களே நீங்கள் உங்களின் இந்த புரட்சித்தீயினை அணையாமல் பாத்துக்கொள்ளுங்கள். உங்கள் சமூக குடிமை உணர்வுகளை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
சட்டமன்றத்தேர்தலுக்கு உங்கள் வியூகம் என்ன?
நமது வியூகங்களை அடுத்தவருக்கு சொல்லக்கூடாது. அவ்வாறு சொல்லிவிட்டால் அது வியூகமே அல்ல.
எனவே வியூகங்களில் ரகசியம் காக்கப்படவேண்டும். நாங்கள் வென்ற பிறகு உங்களுக்குச் சொல்கிறேன்.

MNM-Kamal
அரசியலுக்கு வரவிரும்பும் மாணவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன ?
அரசியலுக்கு வரவிரும்பிவிட்டாலே நீங்கள் வந்துவிட்டீர்கள் என்பது தான் உண்மை. எனது அறிவுரை என்பது உங்களுக்கு தேவையில்லை.
