India | இந்தியா
கொத்துக்கொத்தாக வேலையை விட்டு அனுப்பும் பிரபல நிறுவனங்கள்.. தலை சுற்றி நிற்கும் ஐ.டி ஊழியர்கள்
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் இருக்கும் இந்த சூழ்நிலையில் ஐ.டி கம்பெனிகளில் வேலை பார்க்கும் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் பிரபல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இதில் முக்கியமாக காக்னிசண்ட் 10,000-12,000 வரை ஊழியர்களை வெளியேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஃபோசிஸ் நிறுவனம் 7000 ஊழியர்களை வெளியேறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இளைஞர்கள் ஐ.டி வேலை நிரந்தரம் இல்லை என்பதை உணர்ந்து, தன் கையே தனக்கு உதவி என்ற பாணியில் சுய தொழில் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது அதைப்போல் இளைஞர்கள் ஏதாவது சுய தொழிலை செய்துகொண்டே ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்த்தால் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் வாழ்க்கையை கடந்து செல்லலாம். இதுபோன்ற நிரந்தரமில்லாத வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு இந்த சூழ்நிலையை கடந்து செல்வது மிக கடினம் தான்.
ஆனால் தன்னம்பிக்கையோடு போராடி சுய தொழில் அல்லது வேற நிறுவனத்திற்கு சரியான நேரத்தில் போய்விட்டார்கள் என்றால் கண்டிப்பாக எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் தங்களை காத்துக் கொள்ளலாம்.
Along with its Q3 earnings, #Cognizant has announced a huge round of layoffs that's going to impact thousands of employees in the middle to senior level. 10,000-12,000 people will be removed from their current roles, out of which 5,000 will be reskilled/redeployed. pic.twitter.com/BiufFens6M
— Chandra R. Srikanth (@chandrarsrikant) October 31, 2019
